முதலில் YouTube க்கு நன்றியை தெரிவிக்க வேண்டியது தமிழ் திரைப்பட ரசிகர்களின் கடமையாகும். கடந்த 80 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு நம் கைக்கு எட்டாமல் புதைந்து கிடக்கும் பழைய மற்றும் புதிய தமிழ் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளரின் காப்பு உரிமை பாதிக்காமல் வீட்டில் இருந்தபடியே நாம் கண்டு களிக்க மிக பெரிய சேவையை செய்துகொண்டிருக்கிறது. சில பழைய திரைப்படங்கள் எங்குமே கிடைப்பதில்லை. அனால் இந்த திரைப்படங்கள் சிறு சிறு துண்டுகளாக YouTube ல் கிடைகிறது. இன்றைய இணையாக உலகத்தில் கைபேசி மூலமாகவே நம்மால் திரைப்படங்களை பார்க்க முடிகிறது என்றால் அதற்க்கு YouTube ம் ஒரு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது.