அரசியல் வாதிகளால் குடிசை வாழ் மக்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள், அவர்களின் உணர்வுகள் எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதை அரசியல் கலந்து ரசனை மிக்க சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். வட சென்னையின் யதார்த்த மனிதர்களின் வீடு, வாழ்க்கை, விளையாட்டு, திறமை, காதல், அன்பு, வன்மம், அரசியல் என்று பயணிக்கும் படத்தை உண்மைத்தன்மையோடு மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்தப்படம் கார்த்தி க்கு ஒரு ஸ்பெசல் படம்தான், அப்படியே ஒட்டி விடுகிறார். யதார்த்தமான பக்கத்துவீட்டு பையனாகவும் , நண்பனுக்காக கோபப்படும் இடங்களிலும் வாழ்ந்திருக்கிறார். எந்தவித பந்தா பரபரப்பு இல்லாமல் வெளியாகி அனைவரது மனதையும் கவர்திளுக்கும் படம் மெட்ராஸ்.
விமர்சனத்தை பார்க்க பாடல்களை கேட்க
விமர்சனத்தை பார்க்க பாடல்களை கேட்க