ஆங்கில திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அடென்போரோ
(29ஆகஸ்ட்1923 - 24ஆகஸ்ட்2014) நேற்று காலமானார். ‘காந்தி’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர், இந்த படத்திற்காக இரண்டு அகடமி விருதுகள் பெற்றவர். மேலும் நான்கு பாப்டா விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் பெற்றிருக்கிறார். நடிகராக இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’, ‘தி கிரேட் எஸ்கேப்’, ’10 ரிலிங்டோன் பிளேஸ்’ ‘மிரக்கில் ஆன் 34த் ஸ்ட்ரீட்’ மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத அளவு பதிந்தவை. ஆரம்ப காலத்தில் இரண்டாம் உலகபோரின் போது ராயல் விமான படையில் விமானியாக தனது வாழ்கையை ஆரம்பித்த ரிச்சர்ட் அடென்போரோ, தனது திரைப்பட வாழ்க்கையை 1942 ல் ‘இன் விச் வி சர்வ்’ என்ற படத்தில் மாலுமியாக நடித்து ஆரம்பித்தார். 1947 ல் ‘பிரைட்டன் ராக்’ என்ற படத்தில் இவர் நடித்த பிங்கி பிரவுன் என்ற வேடம் இவரது திரை வாழ்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1949ல், இவர், பிரிட்டனின் ஆறாவது சிறந்த வசூல் நடிகராக தேர்ந்தெடுக்கபட்டார்.
1983 ல், இந்தியா, இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.
ரிச்சர்ட் அடென்போரோவின் படங்களின் பட்டியலை பார்க்க.