சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "சூப்பர் 10' நிகழ்ச்சியின் மூலம் பெயர் பெற்ற சுருளி மனோகர் சுறா, படிக்காதவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுருளி மனோகருக்கு இன்று பிற்பகலில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. மறைந்த சுருளி மனோகருக்கு (51) பச்சையம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் நடைபெறுகிறது. |