தனுஷ் நடித்த “வேலை இல்லா பட்டதாரி” வெளியான முதல் வாரத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்தின் முதல் நாள் (18 ஜூலை) வசூல் மட்டுமே ₹4.36 கோடியை தாண்டியுள்ளது. அதை தொடர்ந்து வார கடேசியில் ₹12.96 கோடியை தாண்டி முதல் வாரத்தில் அதிக அளவு வசூல் செய்த தனுஷ் படம் என்ற இடத்தை “வேலை இல்லா பட்டதாரி” பெற்றுள்ளது. சென்னையிலும் இந்த படம் தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. சென்னையில் முதல் வார வசூல் ₹1.67 கோடி. இது 2014 வருடத்தில் ரஜினிகாந்த்தின் கொச்சடையான் படத்திற்கு அடுத்ததாக முதல் வாரத்தில் அதிக அளவு கிடைத்த வசூலாகும். வெளிநாடுகளிலும் “வேலை இல்லா பட்டதாரி” நல்ல வசூல் வேட்டையை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இதன் வசூல் 1 கோடி டாலர்களை தாண்டி 1.5 கோடி டாலர்களை நெருங்கி கொண்டிருப்பதாக படத்தின் விநியோகத்தர் (ATMUS Entertainment) தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் நையாண்டி திரைப்படத்திற்கு கிடைத்த வசூலை விட 10 மடங்கு அதிகம் என்றும் அந்த ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுபோல் பிரிட்டன் மற்றும் ஆஸ்த்ரேலியாவிலும் முறையே ₹24 லட்சம் மற்றும் ₹18 லட்சம் என்று வசூல் செய்து நம்பிக்கையுடன் படம் ஓடிகொண்டிருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் எதுவும் நல்ல வெற்றியை பெறவில்லை. அந்த குறையை “வேலை இல்லா பட்டதாரி” நீக்கி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார் என்பதில் சந்தேகமில்லை இந்த வார திரைப்பட தரவரிசையை பார்க்க |